search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை தொழிற்பயிற்சி நிலயம்.
    X
    உடுமலை தொழிற்பயிற்சி நிலயம்.

    தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு வேலை நிச்சயம்-அதிகாரிகள் பேச்சு

    அரசு ஐ.டி.ஐ.,யில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக்கட்டணம் கிடையாது. மாத உதவித்தொகையும், லேப்டாப், பஸ் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலை அரசு ஐ.டி.ஐ.,யில், எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக் மோட்டார், வெல்டர், ஒயர்மேன் உள்ளிட்ட தொழில்பிரிவுகள் கற்பிக்கப்படுகிறது.நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்காக வட்டார வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
     
    மேலும் கிராமப்புற மாணவர்களிடையே தொழிற்படிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில்  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் குடிமங்கலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அரசு ஐ.டி.ஐ., அலுவலர்கள் பேசியதாவது:-
    இரண்டு மற்றும் ஓராண்டு தொழிற்படிப்புகள் முடிக்கும் மாணவர்களுக்கு கட்டாயமாக வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அரசு ஐ.டி.ஐ.,யில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக்கட்டணம் கிடையாது. 

    மாத உதவித்தொகையும், லேப்டாப், பஸ் பாஸ்  உள்ளிட்ட  பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் கிராமங்களில் தொழிற்படிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றனர். மாணவர் சேர்க்கைக்கான துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.
    Next Story
    ×