search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

    முதற்கட்டமாக மாநில கருத்தாளர்களை வைத்து தேர்வு செய்யப்பட் மாவட்ட கருத்தாளர்களுக்கு இன்று வரை பயிற்சி நடக்கிறது.
    திருப்பூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் ஹைடெக் ஆய்வகங்களில் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள கம்ப்யூட்டரை கையாளுதல், இணையதளத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

    இதற்கான வீடியோக்கள், மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியே, ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மாநில கருத்தாளர்களை வைத்து தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கருத்தாளர்களுக்கு இன்று வரை பயிற்சி நடக்கிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் 12 கருத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர். அடுத்த கட்டமாக மாவட்ட கருத்தாளர்களாக பயிற்சி எடுத்தவர்களை வைத்து அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் வருகிற 2-ந்தேதி முதல் பல்வேறு கட்டங்களில் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×