search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.ஆர்.தனபாலன்
    X
    என்.ஆர்.தனபாலன்

    நாடார் சமுதாயத்துக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்- என்.ஆர்.தனபாலன்

    நாடார் சமுதாயத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வர்த்தகத்தில் முன்னேறியுள்ளதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகப் பெரும்பான்மையுடனும் கொங்கு மண்டலம் உள்பட தமிழகம் முழுவதும் பரவலாகவும் மக்கள் தொகையில் 1 கோடிக்கு மேல் தொழில் சார்ந்து வாழ்ந்து வரும் நாடார் சமுதாய மக்கள் தங்களின் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி உள்ளார்கள்.

    ஏற்கனவே அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை 2 ஆக பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்கி அதில் சில சமுதாயங்கள் அடங்கிய பட்டியலை இணைத்து அவர்களுக்கு கூடுதலான சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதனால் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அச்சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

    நாடார் சமுதாயத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வர்த்தகத்தில் முன்னேறியுள்ளனர். இன்னும் ஏராளமானோர் விவசாய கூலியாகவும், பனைமரம் ஏறும் தொழிலாளியாகவும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலாளியாகவும் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

    இன்னும் சிலர் தங்களின் வசதிக்கேற்ப சிறு, சிறு கடைகளை தொடங்கி அதில் தங்களது குடும்பம், மனைவி, மக்கள் முழுவதையும் உழைக்கச் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் உழைக்கிறார்கள்.

    உழைப்புக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த சமுதாயத்தில் முன்னேற துடிக்கும் நாடார் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே வருங்காலம் தமிழகத்தில் இல்லாமை இல்லாத நிலை உருவாகும். தமிழகத்தில் 1 கோடிக்கு மக்களுக்கு மேல் வாழும் நாடார் சமுதாயம் வளர்ச்சி பெறும்போது தமிழகம் நிமிரும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., சி.ஏ. போன்ற அரசின் உயர் பதவிகளில் நாடார் சமுதாயத்தினர் தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக உள் இட ஒதுக்கீடு அவசியமாகிறது.

    தான் உண்டு தன்வேலை உண்டு என்று தங்களின் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் நாடார் சமுதாயம் கல்வி மற்றும் அரசின் வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நாடார் சமுதாயத்திற்கு 15 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×