search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- கோவையில் புதிதாக 188 பேர் பாதிப்பு

    கடந்த 3 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. கடந்த 24-ந் தேதி 175 பேருக்கும், 25-ந் தேதி 169 பேருக்கும், 26-ந் தேதி 164 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி முதல் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று முன்தினம் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து 188 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 874 பேருக்கு தொற்று உறுதியானது.

    மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 198 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். இதன் மூலம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 797 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள்.

    இதற்கிடையே 25 வயது வாலிபர், 36 வயது ஆண் மற்றும் 72 வயது முதியவர் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,172-ஆக உயர்ந்தது. தற்போது 1,905 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை 438 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 87 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

    தற்போது 564 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 351 ஆக்சிஜன் படுக்கைகளில் 76 படுக்கைகள் நிரம்பி உள்ளது. மீதமுள்ள 275 படுக்கைகள் காலியாக இருக்கிறது.
    Next Story
    ×