search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாதாள சாக்கடை குழிகளால் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

    சாலையின் நடுவே குழி தோண்டும் போது அடியில் செல்லும் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பாரப்பாளையம் அருகே எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் 3 வீதிகள் உள்ளது. இந்தப் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு சாலையின் நடுவே குழி தோண்டி போட்டு 2 மாதம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பனியன் நிறுவன தொழிலாளர்கள் சாலையின் நடுவில் உள்ள குழிக்குள் விழுந்து காயமடைகின்றனர்.

    சாலையின் நடுவே குழி தோண்டும் போது அடியில் செல்லும் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனை சரி செய்ய கோரி மாநகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. தெருவிளக்கு சரிவர எரிவதில்லை. இதே நிலை தொடருமானால் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×