search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பனியன் தொழிலாளர் சம்பளம் ஒப்பந்த பேச்சுவார்த்தை-4ந் தேதி தொடங்குகிறது

    தொழிற்சங்க பிரதிநிதிகளை ஆகஸ்ட் 4-ந் தேதி சம்பள உயர்வு குறித்த பேச்சுக்கு வருமாறு அழைப்பு விடுக்க முடிவெடுக்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் 2020 மார்ச் 31ல் நிறைவு பெற்றது. கொரோனா அலையால் புதிய ஒப்பந்தம் குறித்து பனியன் உற்பத்தியாளர்கள் பேச்சு துவங்கவில்லை. நிலைமையை புரிந்து கொண்ட தொழிற்சங்கத்தினர் அமைதி காத்தனர். 

    இரண்டாவது அலை தாக்கி நிலைமை சீரடைந்து பனியன் நிறுவனங்கள் இயங்க துவங்கியுள்ளன. இதையடுத்து பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு குறித்து, ‘சைமா’ அலுவலகத்தில், பனியன் உற்பத்தியாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    ‘சைமா’ தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், நிட்மா, சிக்மா, டீமா, டெக்மா சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கங்களின் சம்பள ஒப்பந்த பேச்சு, தீர்மான விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், தொழிற்சங்க பிரதிநிதிகளை ஆகஸ்ட் 4-ந் தேதி சம்பள உயர்வு குறித்த பேச்சுக்கு வருமாறு அழைப்பு விடுக்க முடிவெடுக்கப்பட்டது.
    Next Story
    ×