search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெத்தை குடோனில் தீ கொளுந்து விட்டு எரிவதை படத்தில் காணலாம்.
    X
    மெத்தை குடோனில் தீ கொளுந்து விட்டு எரிவதை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் இன்று மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து

    கபீர்குட்டி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்த போது குடோனில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் மற்றும் பஞ்சுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன.
    திருப்பூர்:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கபீர்குட்டி (வயது 55). இவருக்கு சொந்தமாக திருப்பூர் இந்திராநகர் புளியமரத்தோட்டம் பகுதியில் மெத்தை தயாரிக்கும் குடோன் உள்ளது. இங்கிருந்து மெத்தைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. 

    இந்தநிலையில் இன்று காலை திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதையடுத்து கபீர்குட்டி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்த போது குடோனில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் மற்றும் பஞ்சுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. 

    இதுகுறித்து உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பஞ்சுகள் என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. குடோன் அருகில் உள்ள கேன் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் தீ பரவியது.  

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மெத்தைகள், பஞ்சுகள் மற்றும் கேன் நிறுவனத்தில் உள்ள கேன்கள் தீயில் எரிந்து சேதமாகின. 

    தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×