search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னையில் 20 நாட்களில் 80 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றம்

    சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 38,259 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை நகரை தூய்மையாக்கி அழகுபடுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் அகற்றும் பணி கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

    அரசு பொது இடங்கள், மாநகராட்சி இடங்கள், மேம்பாலங்கள் போன்ற இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது அகற்றப்பட்டு வருகிறது.

    இந்த பணி 15 மண்டலங்களில் அதிகாரிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 20 நாட்களில் 79,477 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. 14,295 இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

    சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 38,259 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் 22,356-ம், வடக்கு மண்டலத்தில் 18,862-ம் அகற்றப்பட்டுள்ளது.

    சுவரொட்டி அகற்றப்பட்டுள்ள இடங்களில் மீண்டும் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. அரசியல் கட்சிகள் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×