search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மாணவர்களை ஒருங்கிணைக்க முடியாததால் கல்வி கற்பிப்பதில் சிக்கல்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு டிஜிட்டல் கல்வி முறையைக்கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
    உடுமலை:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் ‘வாட்ஸ்ஆப்’ வாயிலாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் செல்போனில் வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்டு அதில் ஆசிரியர்கள் கற்பிக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறியவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பாட வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் இதே முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் சில பள்ளிகளில் புதிதாக பிளஸ்-1 வகுப்பில் இணைந்த மாணவர்களை நேரடியாக பாட ஆசிரியர்கள் சந்திக்காத நிலையில் அவர்களை ஒருங்கிணைக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு டிஜிட்டல் கல்வி முறையைக்கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் புதிதாக பிளஸ்-1ல் இணைந்துள்ள மாணவர்கள் ஜூம் மற்றும் கூகுள் மீட் உள்ளிட்ட இணையதளங்கள் வழியே ஆன்லைன் வகுப்புகள் நடத்த தலைமையாசிரியர்களிடம் முறையிடுகின்றனர்.

    தனியார் பள்ளிகளில் இதுபோன்று வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே அரசுப்பள்ளிகளில் செல்போன் வசதி இல்லாத மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்தகைய நடைமுறையை கொண்டுவர ஆலோசிக்கப்பட்டும் வருகிறது என்றனர்.
    Next Story
    ×