search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் திருமுருகன்பூண்டி மூலிகை பூங்கா

    27 நட்சத்திரங்களுக்கு உகந்ததாக கருதப்படும் மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டன.பக்தர்கள் சில நிமிடம் அந்த பூங்காவில் பொழுது போக்குவது உண்டு.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பழமையான திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை இந்து அறநிலையத்துறை ஏற்றுள்ளது. கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் திருமுருகன்பூண்டி பேரூராட்சி சார்பில் மூலிகை பூங்கா அமைக்கப்பட்டது.

    27 நட்சத்திரங்களுக்கு உகந்ததாக கருதப்படும் மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டன பக்தர்கள் சில நிமிடம் அந்த பூங்காவில் பொழுது போக்குவதுண்டு. பலர் தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த மரங்களை வழிபட்டும் வந்தனர். நடைபயிற்சி தளம், சிறுவர்களுக்கான விளையாட்டு உபரணங்கள் இங்கு உள்ளன. 

    மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் வழிபாடு நடத்துவதன் மூலம் அவர்கள் நலம் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கேற்ப பூங்காவின் ஒரு பகுதியில் மனநலம் குன்றியவர்களுக்கான பிரத்யேக அறை கட்டப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பின்றி புதர்மண்டி பூட்டி கிடக்கிறது.

    இதுகுறித்து திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி கூறுகையில்:-

    கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூங்கா பூட்டி கிடக்கிறது. விளையாட்டு உபகரணங்கள் மாயமாகி உள்ளன. அரிய வகை மரங்கள் சேதமடைந்துள்ளன. பூங்காவை மீண்டும் புதுபொலிவாக்கி பராமரிக்க வேண்டும். இதுகுறித்து  அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார். 

    திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில்:

    மாவட்ட நிர்வாகமோ, கோவில் நிர்வாகமோ பூங்காவை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×