search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சேலம் இ.எஸ்.ஐ.,மண்டலத்துடன் திருப்பூரை இணைக்க தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

    இ.எஸ்.ஐ., காப்பீடு பெற்றுள்ள தொழிலாளர்கள் மருத்துவ தேவைக்காக, 100 கி.மீ., தொலைவில் உள்ள சேலத்துக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தை சேலம் இ.எஸ்.ஐ., மண்டலத்துடன் இணைக்ககூடாது என்று தொழிற்சங்கங்கள் ஒருமித்த குரலை எழுப்பியுள்ளன. 

    இதுகுறித்து திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்க பிரதிநிதிகள் இணைந்து எம்.பி., சுப்பராயனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை என நான்கு மண்டலங்களுடன் இ.எஸ்.ஐ., மருத்துவ நிர்வாகம் செயல்படுகிறது. புதிதாக திருச்சி, வேலூர், திருநெல்வேலி இ.எஸ்.ஐ., மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளது. கோவை மண்டலத்துடன் உள்ள திருப்பூர் மாவட்டத்தை சேலத்துடன் இணைப்பதாக அரசு அறிவித்துள்ளது. 

    அதனால் இ.எஸ்.ஐ., காப்பீடு பெற்றுள்ள தொழிலாளர்கள் மருத்துவ தேவைக்காக, 100 கி.மீ., தொலைவில் உள்ள சேலத்துக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும். அதேநேரம், நிர்வாகம் சார்ந்த தேவைகளுக்கு கோவை செல்ல வேண்டியது உள்ளது. அதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை  உட்பட பல்வேறு துறை சார்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். 

    மருத்துவ உதவிகளுக்காக அலைய வேண்டிய அவல நிலை ஏற்படும். திருப்பூர் மாவட்டம் அருகாமையில் உள்ள கோவை மண்டலத்திலேயே தொடர வேண்டும். சேலத்துடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×