search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    அப்துல் கலாமுக்கு டி.டி.வி.தினகரன் புகழாரம்

    இளைஞர்கள்- மாணவர்களின் இதய நாயகன், அவர்களின் நெஞ்சங்களில் எல்லாம் புது எழுச்சியையும், கனவுகளையும் விதைத்த மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவு நாள் இன்று.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இளைஞர்கள்- மாணவர்களின் இதய நாயகன், அவர்களின் நெஞ்சங்களில் எல்லாம் புது எழுச்சியையும், கனவுகளையும் விதைத்த மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவு நாள் இன்று.

    ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் ஏவுகணை விஞ்ஞானியாக உயர்ந்து, எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்த இந்திய குடியரசுத் தலைவராக திகழ்ந்து டாக்டர் அப்துல் கலாம் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×