search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    2021-22 கல்வி ஆண்டுக்கும் சிபிஎஸ்இ பாடங்களில் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது

    பாடங்கள் 30 சதவீதம் குறைப்பு மற்றும் 2 கட்ட தேர்வுகள் தொடர்பாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

    மாணவர்கள் நலன் கருதி கடந்த ஆண்டு முழு பாடத்திட்டமும் நடத்தப்படவில்லை. அதற்கு பதில் 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டன. இந்த நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டிலும் வகுப்புகளை நடத்த முடியாத நிலை நீடிக்கிறது.

    எனவே 2021-22-ம் கல்வி ஆண்டிலும் பாடங்களை குறைக்க சி.பி.எஸ்.இ. நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டை போல 30 சதவீதம் அளவுக்கு பாடங்கள் குறைக்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சி.பி.எஸ்.இ. நேற்று வெளியிட்டது.

    பாடங்களை 30 சதவீதமாக குறைப்பது மட்டுமின்றி 2 கட்டமாக தேர்வு நடத்தவும் சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டை போல 10, 12-ம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சி.பி.எஸ்.இ. இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி முதல் கட்ட தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். 2-ம் கட்ட தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாடங்கள் 30 சதவீதம் குறைப்பு மற்றும் 2 கட்ட தேர்வுகள் தொடர்பாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கேள்விகளுக்கு பல்வேறு பதில்களில் இருந்து விடைகளை தேர்வு செய்வது என்ற முறையில் முதல் கட்ட தேர்வு நடத்தப்படும்.

    அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வகையில் 2-ம் கட்ட தேர்வு நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

    இது குறித்து அண்ணாநகர் சென்னை பப்ளிக் பள்ளி முதல்வர் ஆசாநாதன் கூறுகையில், கடந்த ஆண்டை போல பாடங்களை நடத்த உள்ளோம் என்றார்.

    இந்த 2 கட்ட தேர்வு நடத்துவது போல செய்முறை தேர்வுகளையும் 2 கட்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×