search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பொது நூலகங்கள் அரசு பள்ளியுடன் இணைக்கப்படுமா?

    மாணவரை வாசிப்புக்குள் கொண்டுவர ஒவ்வொரு ஆசிரியரும் வாசிப்பை நேசிக்கும் ஆசிரியர்களாக மாற வேண்டும்.
    திருப்பூர்,ஜூலை:

    கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை  மறந்துள்ளனர். இந்தநிலையில் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் நினைத்தால் நூலகங்கள் மூலம் வாசிப்பு பழக்கத்தை  மீட்டெடுக்கலாம் என்கிறார் திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி.
     இதுபற்றி அவர்  கூறியதாவது:-
    மாணவரை வாசிப்புக்குள் கொண்டுவர ஒவ்வொரு ஆசிரியரும் வாசிப்பை நேசிக்கும் ஆசிரியர்களாக மாற வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் துறை சார்ந்த நூல்களையும், மற்ற விருப்பமான நூல்களையும் வாசித்து அதை கற்பித்தலின் ஒரு பகுதியாக நிகழ்த்த வேண்டும். பள்ளியில் செயல்படுத்தப்பட கூடிய மதிப்பீட்டு முறையான சி.சி.இ., தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் 40 மதிப்பெண்கள் சிறு தேர்வுகளாகவும், செயல்திட்டங்களாகவும் மாணவர்களை செய்ய வைத்து பின்பற்றப்படுகிறது. அந்த செயல்திட்ட மதிப்பெண்களில் அதிகபட்சமாக 10 மதிப்பெண்களை பாடம் சார்ந்த நூல்களை வாசிக்க வைத்து, சிறுகதைகள், கட்டுரைகள், படக்கதைகள் போன்ற மாணவர் விரும்பும் புத்தகங்களை வாசித்து அதனை வகுப்புகளில் நேரடி அனுபவமாக பகிர வைத்து மதிப்பெண் வழங்கலாம்.
    வரும்காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பொது நூலகத்தை அரசு பள்ளியுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு பள்ளி நூலகங்களை சீரமைத்து கல்வித்துறையில் கற்றல்-கற்பித்தல் சார்ந்து நூலகங்களை முறைப்படுத்தினால் பள்ளி நூலகங்கள் உயிர்ப்புடன் செயல்படும். வாசிக்கும் பழக்கம் மாணவர்களுக்கு வரும்போது நேர்மறை எண்ணங்களால் அவர்களின் வாழ்க்கை படிப்படியாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×