search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பொதுமக்களிடமிருந்து அமைச்சர் கீதாஜீவன் மனுக்களை பெற்றுக் கொண்ட போது எடுத்த படம்
    X
    தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பொதுமக்களிடமிருந்து அமைச்சர் கீதாஜீவன் மனுக்களை பெற்றுக் கொண்ட போது எடுத்த படம்

    தூத்துக்குடி தொகுதியில் 2-வது நாளாக மக்கள் குறைகேட்பு முகாம் - அமைச்சர் கீதாஜீவன் மனுக்கள் வாங்கினார்

    தூத்துக்குடி தொகுதியில் நேற்று 2-வது நாளாக அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகேட்டார்.
    ஸ்பிக் நகர்:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தி வருகிறார். நேற்று முத்தையாபுரம் பகுதியில் 2-வது நாளாக மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    அப்போது அவர் பேசுைகயில், முத்தையா புரத்திலிருந்து தூத்துக்குடி புதிய துறைமுகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்காக நகரப் பேருந்து வசதி இல்லாமல் உள்ளது. இதனை நான் முதல்-அமைச்சரிடம் கூறி உள்ளேன். அவர் கண்டிப்பாக அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க உறுதி அளித்துள்ளார். ட்விட்டரில் ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர் பதிவிட்டு இருந்துள்ளார். அதில் தனக்கு ஒரு மூன்று சக்கர வாகனம் வேண்டும் என்றும், அரசு தரும் வாகனம் வேண்டாம், முதல்-அமைச்சர் தர வேண்டும் என்று கேட்டிருந்தார். அதை ட்விட்டரில் பார்த்த முதல்-அமைச்சர் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் உள்ள அந்த இளைஞனின் நிலைமையை பார்த்து அவருக்காக ரூ.3 லட்சம் செலவில் மோட்டார் சைக்கிள் வழங்கியுள்ளார். தூத்துக்குடி, நெல்லை மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. அவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அமையும். முத்தையா புரத்தில் கழிவுநீர் கால்வாய் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, அதனை சரி செய்து தர வேண்டும். உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக கண்டிப்பாக நிறைவேற்றித் தருவேன். இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×