search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    விற்பனை சந்தை இல்லாததால் வருவாய் இன்றி மலைவாழ் மக்கள் பாதிப்பு

    தென்னை நாரில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மலைவாழ் கிராம பெண்களுக்கு வழங்கப்பட்டது.
    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம்  உடுமலை அமராவதி வனச்சரகங்களில் 13 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் இம்மக்கள் வனத்தில் கிடைக்கும் சீமாறுபுல், தேன், வடுமாங்காய் ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்து வருவாய் பெற்று வருகின்றனர். 

    இவர்களது நிரந்தர வருவாய்க்காக பட்டுக்கூடு வளர்ப்பு, தைலம் தயாரித்தல் உட்பட பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழில் தொடங்கினாலும் பல்வேறு நடைமுறை சிக்கல்களால் அத்தொழில்கள் கைவிடப்பட்டன.

    பின்னர் தென்னை நாரில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மலைவாழ் கிராம பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தென்னை நாரிலிருந்து பெண்கள் அணியும் காதணி முதல் அனைத்து ஆபரணங்களும் தயாரித்தல், கால் மிதியடி உற்பத்தி, பொம்மைகள் தயாரிப்பிற்கு பயிற்சியளிக்கப்பட்டது. 

    வனத்தில், இயற்கையோடு இணைந்து வாழும் மக்களின் கற்பனை மற்றும் கைவினைத்திறன் என்றும் தனித்தன்மையுடன் இருக்கும் என்பதை பொம்மைகள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்பில் மலைவாழ் பெண்கள் நிரூபித்தனர். இவ்வாறு  கைவினை பொருட்கள் தயாரிப்பில் கலக்கிய பெண்களுக்கு விற்பனை சந்தை முக்கிய பிரச்சினையாக உள்ளது. 

    மேலும், தொடர்ச்சியான உற்பத்தி, விற்பனை இல்லாததால் அத்தொழிலை குறுகிய காலத்தில் கைவிடும் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட நிர்வாகம் வாயிலாக மலைவாழ் கிராம பெண்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர கோரிக்கை விடப்பட்டுள்ளது.
    Next Story
    ×