search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    சென்னை குடிநீர் ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு

    பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னையில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 குடிநீர் ஏரிகளில் தற்போது 8 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 3 டி.எம்.சி. அதிகமாகும்.

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    தற்போது ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அதாவது 7.70 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 65.6 சதவீதமாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரி நீர் இருப்பு 1.371 டி.எம்.சி.யாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 643 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியில் 629 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. புழல் ஏரியில் 2.724 டி.எம்.சி. தண்ணீர், செம்பரம்பாக்கம் ஏரியில் 2.625 டி.எம்.சி. தண்ணீரும், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 433 மில்லியன் கனஅடி தண்ணீரும் இருக்கிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் 4.700 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×