search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆத்தூர் அருகே 1455 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - பாஜக நிர்வாகி கைது

    ஆத்தூர் அருகே இன்று அதிகாலை 1455 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்யவும் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் மேற்பார்வையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தம்மம்பட்டி பகுதியில் கோபால் என்பவரது தோட்டத்தில் அதிக அளவில் போதை புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த தோட்டத்தில் இன்று அதிகாலை தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு 101 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1455 கிலோ போதை புகையிலை பொருட்கள் சிக்கியது. இது குறித்து விசாரணை நடத்திய போது அதனை அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மதிப்பு ரூ. 20 லட்சம். கைதான பிரகாஷ் தம்மம்பட்டி பா.ஜ.க. வர்த்தக அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×