search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆக்கிரமிப்பின் பிடியில் பி.ஏ.பி.,வாய்க்கால்கள்-தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    வாய்க்கால்களில் குப்பைகள் தேங்குவது, புதர்கள் மண்டி கிடப்பது ஆகிய காரணங்களால் பாசன நீர் முறையாக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.
    பல்லடம்:

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து நான்கு மண்டலங்களில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பி.ஏ.பி., பாசன நீர் வினியோகிக்கப்படுகிறது. பல்லடம் வட்டாரத்தில் தென்னை, வாழை, சோளம், மக்காச்சோளம் மற்றும் காய்கறி, தானியங்கள் பயிர் செய்யப்படுகின்றன. பருவமழை மற்றும் பி.ஏ.பி., பாசன நீரை நம்பி விவசாயம் செய்கின்றனர். பி.ஏ.பி.,யில் நான்கு மண்டலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் போதும், கடைமடை பகுதி விவசாயிகள் அவ்வப்போது தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு அடைகின்றனர்.

    வாய்க்கால்களில் குப்பைகள் தேங்குவது, புதர்கள் மண்டி கிடப்பது ஆகிய காரணங்களால் பாசன நீர் முறையாக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. அவ்வகையில் பல்லடம் வட்டாரம் முழுவதும் பல இடங்களில் பி.ஏ.பி., வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பி.ஏ.பி, பாசன திட்டம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. பிரதான வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் உள்ளிட்டவை பல இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. ரியல் எஸ்டேட் பெருகியதால் பாசன நிலங்கள் சுருங்கி விட்டன. அதன்பின் முறையான பாசன நிலங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. பி.ஏ.பி., வாய்க்கால் உள்ள இடத்தில் சில குறிப்பிட்ட இடைவெளிவிட்டே கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    ஆனால் வாய்க்கால்களின் மீது கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். பொதுப்பணித்துறையினரும் கண்டு கொள்வதில்லை. எனவே இந்த விஷயத்தில் கலெக்டர் கவனம் செலுத்தி உரிய ஆய்வு மேற்கொண்டு வாய்க்கால்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×