என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வடமாநிலங்களில் கனமழை - சென்னையில் இருந்து செல்லும் ரெயில்கள் ரத்து
கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
வடமாநிலங்களில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தென்மாநிலங்களில் இருந்து செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பீகார், அசாம், மேற்கு வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
ரெயில் நிலையங்கள், தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், வடமாநிலங்களுக்கு செல்லும் பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று பல ரெயில்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் நேரம் மற்றும் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்...மும்பையில் பலத்த மழையால் 6000 பயணிகள் தவிப்பு
Next Story