search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடமாற்றம்
    X
    இடமாற்றம்

    விழுப்புரம் மாவட்டத்தில் 41 போலீசார் இடமாற்றம்

    திண்டிவனம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் பெரும்பாக்கம் மதுவிலக்கு அமல்பிரிவு சோதனைச்சாவடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், செஞ்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கும், திண்டிவனம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் பெரும்பாக்கம் மதுவிலக்கு அமல்பிரிவு சோதனைச்சாவடிக்கும், பெரியதச்சூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் தொந்திரெட்டிப்பாளையம் சோதனைச்சாவடிக்கும்,

    விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் மற்றும் போலீஸ் ஏட்டுகள், போலீஸ்காரர்கள் என 41 பேர் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×