search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளக்கோவிலில் ரூ.410 கோடியில் மாதிரி சுற்று வட்டச்சாலை

    நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சுற்று வட்டச்சாலை அமைப்பது அவசியமாகும்.
    வெள்ளக்கோவில்:

     திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகரில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் சுற்று வட்டச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கள ஆய்வு விவரங்களானது, கோவை-கரூர்,திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் நகர் வழியாக செல்கிறது.

    நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சுற்று வட்டச்சாலை அமைப்பது அவசியமாகும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளமடையிலிருந்து தென்புறத்தில் செங்காளிபாளையம், வடபுறம் தீத்தாம்பாளையம், தென்புறம் அக்கரைப்பாளையம் சாலை, வெள்ளக்கோவில் - புதுப்பை சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக 16 கிலோ மீட்டர் கடந்து ஒத்தக்கடையில் சுற்று வட்டச்சாலை முடிவடைகிறது

    4 லட்சத்து 80 ஆயிரம் சதுர மீட்டர் இடம் கையகப்படுத்த வேண்டும். கட்டடங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை மற்றும் சாலை அமைக்கும் பணிகளுக்காக ஒட்டு மொத்தமாக ரூ.410.58 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×