search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊரடங்கில் இயக்கப்படாததால் பழுதான அரசு பஸ்கள்

    குறிப்பாக பயணிகள் ஏறும் படிக்கட்டில் உடைப்பு, கதவு மற்றும் ஜன்னல் ஓர கண்ணாடிகள் இல்லாமை, பேட்டரி பழுது என பல பிரச்சினைகள் உள்ளன.
    உடுமலை :

    உடுமலையில் செயல்படும் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் 36 புறநகர் பஸ், 58 டவுன் பஸ்கள் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தற்போது 33 டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இங்குள்ள டவுன் பஸ்களில் பெரும்பாலானவை வெளியூரில் இயக்கப்பட்டு காலாவதியான நிலையில் இந்த கிளைக்கு வழங்கப்பட்டவை.

    உடுமலையில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள்  பெரும்பாலும் பழுதடைந்தே காணப்படுகிறது. குறிப்பாக பயணிகள் ஏறும் படிக்கட்டில் உடைப்பு, கதவு மற்றும் ஜன்னல் ஓர கண்ணாடிகள் இல்லாமை, பேட்டரி பழுது என பல பிரச்சினைகள் உள்ளன.இதில்  பேட்டரி சரியாக செயல்படாத பஸ்களை தள்ளிவிட்டு ‘ஸ்டார்ட்’ செய்யும் நிலை உள்ளது.

    இதனால் டிரைவர்கள் சிலர், பஸ்  நிலையத்தில் நிறுத்தப்படும் பஸ்சை ஸ்டார்ட் செய்த நிலையிலேயே நிறுத்துகின்றனர். இதனால் எரிபொருள் செலவு ஆவதோடு பஸ் எந்த நேரத்தில் நகருமோ என பதட்டத்தில் பயணிகள் மனநிலை மாறி விடுகிறது. ஊரடங்கு காரணமாக இரு மாதங்களுக்கும் மேலாக பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டதே இதற்கு காரணம் என டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், ‘பேட்டரி பழுதை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ்சில் உள்ள பேட்டரியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அதில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு மாற்றாக வேறோரு பேட்டரி பொருத்தப்படுகிறது என்றனர்.
    Next Story
    ×