search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குமரியில் ஒரு வாரத்தில் கஞ்சா விற்பனை செய்த 20 பேர் கைது

    நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் வடசேரி கனகமூலம் சந்தை வடக்கு கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகளவு நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் வடசேரி கனகமூலம் சந்தை வடக்கு கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு பெண் உள்பட 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கம்பம் உத்தமபாளையம் பாரதியார் நகரைச்சேர்ந்த செல்வி (வயது 45), நாகர்கோவில் புத்தேரி மேலகலுங்குடி புளியடி ரோடு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்து தாஸ் (47), கண்ணன்குளம் கீழ சரக்கல் விளையைச் சேர்ந்த காமராஜ் (50) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் கோட்டார் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த வல்லன் குமாரன் விளையைச் சேர்ந்த விஷ்ணு (20) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விஷ்ணுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே கஞ்சா விற்பனை செய்ததாக 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
    Next Story
    ×