search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியீடு- இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

    மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்.
    சென்னை:

    கொரோனா தொற்றால் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போனது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று மத்திய-மாநில கல்வி வாரியங்களால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை மாநில வாரிய பாடத்திட்டத்தின்கீழ் படித்த பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண்களை கணக்கிட்டு அறிவித்தது.

    இந்நிலையில் இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

    இதன்படி www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஏற்கெனவே தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

    மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    முன்னதாக தற்போதைய மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் மற்றும் பிளஸ்-1 தேர்வில் வரமுடியாமல் போனவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும். அதில் எத்தனை பேர் பதிவு செய்கிறார்கள் என்று பார்த்து வருகிற அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×