search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி

    திருப்பூர் மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து பொதுமக்களும் அதிகளவில் தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்த வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தினமும் கொரோனாதொற்று 100க்கும் மேற்பட்டோரை பாதித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் பிரதானமானது எனினும், தடுப்பூசியே தொற்றைத் தடுக்கும் பேராயுதமாக இருக்கிறது.
    மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது. 

    பனியன் தொழிலாளர்கள் பலர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நிறுவனங்களே முன்வந்து இதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இதுகுறித்து திருப்பூர் தொழில்முனைவோர் கூறுகையில்,  

    பின்னலாடைத் தொழிலுக்கு முதுகெலும்பாக தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு தொற்று வராமல் பாதுகாப்பதன் மூலம் உற்பத்தி சங்கிலி தடைபடாமல் இருக்கும். 

    இதனால்தான் தடுப்பூசி செலுத்துவதில் நிறுவனங்களும் அக்கறையுடன் உள்ளன. குறு, சிறு நிறுவன தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் தேவை. அனைத்து தொழிலாளருக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டால் பின்னலாடைத்துறையும் வலிமையானதாக மாறும்.

    திருப்பூர் மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து பொதுமக்களும் அதிகளவில் தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தொற்று இல்லா திருப்பூர் சாத்தியமாகும். மூன்றாவது அலை குறித்து அச்சம் இருக்காது என்றனர்.
    Next Story
    ×