search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    கன்னியாகுமரியில் கோவில் பூசாரியை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

    கன்னியாகுமரியில் கோவில் பூசாரியை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் பகுதியில் ஒரு கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கோழிப்போர் விளையை சேரந்த மகாலிங்கம் என்பவர் பூசாரியாக உள்ளார். தினமும் காலையிலேயே கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்வார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலுக்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் மீண்டும் பூஜை பொருள்கள் எடுத்து வருவதற்காக வீட்டுக்கு சென்றார்.

    பூஜை பொருள்களை எடுத்துவிட்டு மீண்டும் அவர் கோவிலுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் திடீரென அங்கு வந்தனர். அவர்கள் மகாலிங்கத்தை வழிமறித்து அவரது தலையில் துண்டை போட்டு தாக்கினர்.

    பின்னர் மகாலிங்கம் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    நகையை பறிகொடுத்த மகாலிங்கம் இது பற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×