search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கழிவுகளை உரமாக்கி காய்கறி உற்பத்தி

    தினசரி சேகரமாகும் காய்கறிகள், கோழி, முட்டை, மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகள், உணவு பண்டங்கள் உள்ளிட்டவை கிடங்குகள் மூலம் சுழற்சி முறையில் உரமாக மாற்றப்படுகிறது.
    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் மூலம் தினசரி 15 டன் குப்பைகள் சேகரமாகின்றன. அவை மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு நகராட்சி கிடங்குகள் மூலம் மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன. மக்காத குப்பைகள் அரியலூர் சிமென்ட் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகின்றன.

    தினசரி சேகரமாகும் காய்கறிகள், கோழி, முட்டை, மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகள், உணவு பண்டங்கள் உள்ளிட்டவை கிடங்குகள் மூலம் சுழற்சி முறையில் உரமாக மாற்றப்படுகிறது. அவ்வாறு தயாராகும் உரத்தை பயன்படுத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கிடங்குகளுக்குள் காய்கறி செடிகளை வளர்த்து வருகின்றனர்.

    இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் கூறுகையில்:

    ‘நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்படி, காய்கறி செடிகள் வளர்க்க கிடங்குக்குள் இடத்தை தேர்வு செய்து சுத்தம் செய்தோம். இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை பயன்படுத்தி தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், வாழை, கீரை வகைகள், பூச்செடிகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறோம். இயற்கை உரம் என்பதால் செடிகளும் நன்கு வளர்கின்றன. இவை மூலம் ஏராளமான காய்கறிகள், கீரைகள் கிடைக்கின்றன. அவற்றை நாங்களே பயன்படுத்திக் கொள்கிறோம் என்றனர்.
    Next Story
    ×