search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரிப்பு

    அவிநாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு ஊராட்சி ஒன்றிய, துவக்க நடுநிலைப்பள்ளியிலும் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுகிறது.
    அவிநாசி:

    அவிநாசி, திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையம் ஆகிய நகர்ப்புறங்களை ஒட்டி உள்ள துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பள்ளியில் உள்ள வகுப்பறை, ஆசிரியர் பணியிட எண்ணிக்கையை தாண்டியும் மாணவர் சேர்க்கை நடப்பதால் பள்ளி நிர்வாகத்தினர் திணறுகின்றனர்.

    இந்தநிலையில் அவிநாசி டவுன் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் நடத்த நன்கொடை பெறும் நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ஜஸ்டின் ராஜ் பேசியதாவது:-

    இந்தாண்டு பல தனியார் பள்ளியில் இருந்து பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதுவும் நகரை ஒட்டியுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர்.

    அவிநாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு ஊராட்சி ஒன்றிய, துவக்க நடுநிலைப்பள்ளியிலும் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுகிறது. தரமான கல்வி வழங்கப்படுகிறது. எனவே, நகர்புறங்களை தாண்டி கிராமங்களை ஒட்டியுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்க்க முன் வர வேண்டும் என்றார். 

    தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்ட பொருளாளர் கவுரிசங்கர் கூறியதாவது:-

    பெற்றோர் பலர் வேலைக்கு செல்வதில் குழந்தைகளை அருகில் இருந்து கவனிக்க முடிவதில்லை. ஆன்லைன் வகுப்பிலும் பெரிதாய் ஈடுபாடு இல்லை. ஆறு வயது குழந்தைகளை எல்.கே.ஜி., சேர்ப்பதா, முதல் வகுப்பில் சேர்ப்பதா என கிராமப்புற பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுவரை துவக்க நிலை வகுப்பில் ‘அட்மிஷன்’ போடாத அரசு பள்ளிகளும் உண்டு. தொற்று குறைந்து விட்டதால் சீக்கிரம் பள்ளிகளை திறக்க வேண்டும். குறைந்தபட்சம் சுழற்சி முறையிலாவது பள்ளிகள் திறக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையினர் விருப்பம். இது தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வருக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×