search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் பனியன் நிறுவனங்கள் பங்குசந்தையில் பட்டியலிடப்படுமா?

    உலகளவிய ‘பிராண்ட்’கள் இந்திய சந்தையில் நுழைந்திருப்பதை பார்க்கும்போது, உள்ளாடை துறையில் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது.
    திருப்பூர்:

    இந்தியாவில் ஆண்களுக்கான உள்ளாடை சந்தை ரூ.13 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2028ல் இது ரூ.21 ஆயிரத்து 800 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தையில் ‘பிராண்டட் ‘ஆடைகளுக்கு மதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் பிராண்டட் உள்ளாடை கம்பெனிகளின் மதிப்பு சந்தையில் பெருகி வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உலகளவிய ‘பிராண்ட்’கள் இந்திய சந்தையில் நுழைந்திருப்பதை பார்க்கும்போது, உள்ளாடை துறையில் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட முறையான சந்தை அளவு அதிகரித்து வருவதையும் ஒழுங்கற்ற சந்தையின் பங்களிப்பு குறைந்து வருவதையும் பார்க்கையில், விலையை காட்டிலும் ‘பிராண்ட்’டுக்கு முக்கியத்துவம் அளிப்பது தெளிவாக தெரிகிறது.

    இந்த சந்தையில் நிறைய வாய்ப்புகள் இருப்பதால் புதிதாக ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனிகள் உருவாகி உள்ளன. ஆண்களுக்கான உள்ளாடை வாங்குவது என்பது பல ஆண்களுக்கு ‘டூத் பிரஷ்’ வாங்குவது போலத்தான். காரணம் என்னவென்றால் அதை எப்போது தூக்கி எறிவது, புதிதாக எப்போது வாங்குவது என்பது ஆண்களுக்கு தெரியாத, கைவராத கலை.

    இதற்காக சில கம்பெனிகள் தற்போது ‘சப்ஸ்கிரிப்ஷன்’ மாடலையும் கொண்டு வந்திருக்கின்றனர். அதாவது பால், தயிர், பேப்பர் போன்றவற்றை ‘சப்ஸ்கிரைப்’ செய்து வாங்குவது போல உள்ளாடைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின் அதாவது 6 மாதத்துக்கு ஒரு முறை அனுப்பும் வசதிகளும் செய்து தருகின்றனர்.

    ஒரு காலத்தில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்றால் திருப்பூர் என்ற அளவுக்கு இந்திய அளவில் பேசப்பட்டது. வாங்கப்பட்டது.இதனால் பல கம்பெனிகள் பல ஊர்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பங்கு சந்தையில் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. திருப்பூரில் பல உள்ளாடைகள் கம்பெனிகள், 30, 40 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டிருந்தாலும் கூட, முழுமையான பருத்தி உள்ளாடை, ஆர்கானிக் காட்டன் உள்ளாடை என்ற வகைகளில் அதிகம் கவனம் செலுத்தாதது, கம்பெனிகளை பங்கு சந்தையில் பட்டியலிடாதது போன்றவை குறைகளே. எனவே அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×