search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    சூலூர் அருகே தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து 10 செல்போன்-பணம் கொள்ளை

    சூலூர் அருகே தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து 10 செல்போன், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை மற்றும் நூற்பாலை உள்ளது. அங்கு தொழிலாளர்கள் தங்க தொழிற்சாலைக்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளது.

    இந்தநிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை அறுத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தொழிலாளர்களின் அறையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட செல்போன், பணம் மற்றும் அங்கிருந்த ஆவணங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து தொழிலாளர்கள் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது மர்ம நபர்கள் அன்னூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த கொள்ளையர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் மாலிக் (வயது 22), பிரசாத் மாலிக் (24), மன்னஸ் மாலிக் (33), ஹேமந்த்குமார் மாலிக் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    கொள்ளை நடந்து 5 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த சூலூர் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×