search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் அரசு பள்ளி மாணவிகள்

    வகுப்பறைகள் உரிய அளவு இல்லாததால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை ஒதுக்கி கொடுக்கப்பட்டு அங்கிருந்து மாணவிகள் படிக்கும் நிலை உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாநல்லூரில் 2018ல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. 740 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தாண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    பிளஸ்-2 வகுப்பில் 123 மாணவிகள் படிக்கின்றனர். பிளஸ்-1 வகுப்பில்
    இதுவரை 190க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
    ஆனால் மேல்நிலைப்பள்ளிக்குரிய அடிப்படை வசதிகள் பள்ளியில் இல்லை.தலைமை ஆசிரியர் கூட நியமிக்கப்பட்டவில்லை.

    உடற்கல்வி ஆசிரியர், காவலாளி, பியூன், கிளார்க், துப்புரவு பணியாளர்கள் கிடையாது.பிளஸ் -1, பிளஸ்- 2 வகுப்புகளில் 8  பாடப்பிரிவுகள் உள்ளன. அனைத்து பாடப்பிரிவுகளிலும்  மாணவிகள் சேர்ந்துள்ளனர். ஆனால் உயிரியல் ஆசிரியர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேல்நிலைப்பாடப்பிரிவுகளை நடத்த ஏனைய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.வகுப்பறைகள் உரிய அளவு இல்லாததால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை ஒதுக்கி கொடுக்கப்பட்டு  அங்கிருந்து மாணவிகள் படிக்கும் நிலை உள்ளது.

    ஆசிரியர் பற்றாக்குறையை போக்க ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து ‘பள்ளி முன்னேற்ற குழு’ ஏற்படுத்தி உள்ளனர்.அவர்கள் பெற்றோர்களிடம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப பள்ளி வளர்ச்சி நிதியாக ஆயிரம் முதல்  ரூ.5ஆயிரம் வரை வசூலித்து வருகின்றனர்.

    இதன் மூலம் ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.
    இதனிடையே  பள்ளியில் கூடுதலாக வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால்  6  மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை பணி தொடங்கப்படவில்லை.

    பெற்றோர் கூறுகையில், போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதோடு, ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×