search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

    அலங்காநல்லூர் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் செய்தனர்.
    அலங்காநல்லூர்:

    அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி ஊராட்சி பகுதியில் வாடிப்பட்டி, தாதம்பட்டி சாலை முதல் மேலூர் சாலையில் உள்ள புதுதாமரைப்பட்டி சாலை வரை புதிய நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தியது. இதற்குரிய இழப்பீடு தொகை சரியாக வழங்கக்கோரி விவசாயிகள் வயல்வெளியில் இறங்கி வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மற்ற இடங்களில் வழங்கிய இழப்பீடு தொகை போல் பண்ணைகுடி பகுதியில் கையகப்படுத்திய நிலங்களுக்கும் உரிய இழப்பீடு தொகை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்கிய பின்னே நான்கு வழிச்சாலைக்காண வேலைகள் தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் போராட்டத்தை ெதாடர்ந்து, சம்பவ இடத்திற்கு அலங்காநல்லூர் போலீசார் வந்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு அலுவலர் ராஜசேகரன், வாடிப்பட்டி தாசில்தார் பழனிகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகள் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×