search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆடை வர்த்தக கண்காட்சி-உற்பத்தியாளர்கள் பங்கேற்க அழைப்பு

    அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாட்டு வர்த்தகர்கள் பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்த உள்ளனர்.
    திருப்பூர்:

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதி வரை பிரசித்தி பெற்ற ‘மேஜிக் பேர்’ கண்காட்சி ஆன்லைன் கண்காட்சியாக நடைபெற உள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாட்டு வர்த்தகர்கள் பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்த உள்ளனர். 

    இருப்பிடத்தில் இருந்தபடியே இணையதளம், ஐபோன், ஆன்ட்ராய்ட் செயலிகள் வாயிலாகவும், கண்காட்சியை பார்வையிடுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்காட்சியில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம்(ஏ.இ.பி.சி.,) ஏற்பாடு செய்துள்ளது. கண்காட்சியில் பங்கேற்பதற்கு ரூ.1.55 லட்சம் கட்டணம் ஆகும். வரும் 26-ந்தேதிக்குள் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×