search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரேசன்கடைகள் அடைப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்

    கொரோனா நிவாரண தொகையாக ரூ.4000 ஆயிரம் 2 தவணையாக கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது.
    திருப்பூர்:
     
    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியது. அதன்படி கொரோனா நிவாரண தொகையாக ரூ.4000 ஆயிரம் 2 தவணையாக கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்கியதன் காரணமாக கடந்த 2 மாதங்கள் விடுமுறை நாட்களில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை பார்த்தனர். அதனை ஈடுசெய்யும் விதமாக விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இன்று ரேசன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. சி.டி.சி., பஸ் நிலையம் அருகே உள்ள ரேஷன் கடை, பெரிய கடை வீதி, வாலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த தகவல் தெரியாமல் பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்தனர். தகவல் பலகையை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    Next Story
    ×