search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.
    X
    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

    இணையவழியில் வினாடி-வினா போட்டி

    நூலக வாசகர் வட்டம், கலிலியோ அறிவியல் கழகம் இணைந்து இணையவழியில் வினாடி வினா போட்டியை நடத்தியது.
    உடுமலை:

    உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் காமராஜர் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நூலகர் மகேந்திரன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி, பட்டதாரி தமிழ் ஆசிரியர் சின்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்தும் அவர் கல்விக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் விளக்கி பேசினர்.

    காலை 9 மணி முதல் 4 மணிவரை நூலக வாசகர் வட்டம், கலிலியோ அறிவியல் கழகம் இணைந்து இணையவழி வினாடி வினா நடத்தியது. இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். தொடர்ந்து காமராஜர் குறித்த கருத்தரங்கில் உடுமலை கிளை நூலகம் எண் 2 நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு, பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் சின்ராஜ், பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் பூலங்கினார் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன், முள்ளுப்பட்டி ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் தர்மராஜ், வழக்கறிஞர் சத்தியவாணி ஆகியோர் கலந்து கொண்டு காமராஜர் குறித்து பேசினர்.

    இதில் 1000க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். நூலகர் கணேசன் வரவேற்றார். முடிவில் கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் நன்றி கூறினார்.
    Next Story
    ×