search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    ஜே.இ.இ. 4-ம் கட்ட முதன்மை தேர்வு ஒத்திவைப்பு

    ஜே.இ.இ. 4-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கு பதிவு செய்வதற்கு வருகிற 20-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
    சென்னை:

    4 கட்டங்களாக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மை தேர்வின், முதல் கட்டத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்திலும், 2-ம் கட்டத்தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெற்று முடிந்தன. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட இருந்த 3 மற்றும் 4-ம் கட்டத்தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளில் 3-ம் கட்டத்தேர்வு வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், 4-ம் கட்டத்தேர்வு 27-ந்தேதி முதல் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 2-ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் 3-ம் கட்டத்தேர்வுக்கும், அதன் தொடர்ச்சியாக நடைபெறும் 4-ம் கட்டத்தேர்வுக்கும் இடையே அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதனை ஏற்று, தற்போது ஜே.இ.இ. 4-ம் கட்ட முதன்மைத்தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தன்னுடைய ‘டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜே.இ.இ. 4-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கு பதிவு செய்வதற்கு வருகிற 20-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. மாணவர்கள் தொடர்ந்து வைத்த கோரிக்கையினை கருத்தில் கொண்டும், அவர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவுவதற்காகவும் ஜே.இ.இ. 3-ம் கட்ட மற்றும் 4-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு இடையில் 4 வார இடைவெளி வழங்க தேசிய தேர்வு முகமையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, ஜே.இ.இ. 4-ம் கட்ட முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் 26, 27, 30 மற்றும் செப்டம்பர் 1, 2-ந்தேதிகளில் நடைபெறும். ஏற்கனவே இந்த தேர்வுக்கு 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.


    Next Story
    ×