search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இரு சக்கர வாகன மானியம் பெற குவிந்த பெண்கள்

    தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை பயனாளிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் வழங்கினார்.
    திருப்பூர்:

    கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மாநில அரசு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவித்தது. அதனடிப்படையில் கடந்த 2019-20ம் நிதியாண்டில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். இரு சக்கர வாகன ஏஜென்சியிடம் முழு தொகை செலுத்தி வாகனம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    அவ்வகையில் மானியத் தொகை அறிவிக்கப்பட்ட பயனாளிகள் 205 பேருக்கு மாநகராட்சி அலுவலகத்தில் மானியத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை பயனாளிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் வழங்கினார்.

    இந்தநிலையில் இரு சக்கர வாகனத்துக்கான மானியம் பெற தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் மாநகராட்சி சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு மூலம் விண்ணப்பித்திருந்தனர். மானிய தொகை 1 1/2ஆண்டுக்கு பின் தாமதமாக வழங்கப்பட்டது. இதற்காக வரவழைக்கப்பட்ட பயனாளிகளிடம் பல்வேறு ஆவணங்கள் சரி பார்த்து செக் வழங்கப்பட்டது.

    இதற்கு வந்த பயனாளிகள் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சமூக இடைவெளி இன்றி அவர்கள் முட்டி மோதிக் கொண்டு ஆவணங்களை சமர்ப்பிக்க காத்திருந்தனர். தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால் பலர் பீதிக்கு உள்ளாகினர்.
    Next Story
    ×