search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சீரமைக்கப்படுமா?

    உடுமலை நகரில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இப்பகுதியில் விவசாயத்துக்கு ஆதாரமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவழை உள்ளது. நடப்பாண்டு தாமதமாக தென்மேற்கு பருவமழை துவங்கி இரு நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் குறித்த நேரத்தில் விதைப்பு செய்ய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    உடுமலை நகரில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பஸ் நிலையத்தில் இருந்து நகர எல்லையான ராஜவாய்க்கால் பள்ளம் வரை ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பாதித்தனர்.

    தற்போது அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதியில் துவங்கியுள்ள மழையால் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 775 கன அடியாக உயர்ந்துள்ளது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில் மழை நீர் ஓடைகளின் நீர்வரத்து மற்றும் நீரோட்ட பாதைகளில் தடுப்புகளை அகற்ற வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×