search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்- ஜி.கே.வாசன்

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 அன்று அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜூலை 15-ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள். தமிழர்கள் அனைவரும் பெருந்தலைவர் ஆற்றிய நற்பணிகளை நினைவில் வைத்து தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டு பெருந்தலைவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்க வேண்டும்.

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 அன்று அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. 

    இளம் வயது முதலே நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மை என்றால் அது பெருந்தலைவர் காமராஜர் தான்.

    கல்வித்துறையில் மட்டுமல்லாமல் தொழில்துறை, நீர்ப்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். இவரது ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலம்.

    பெருந்தலைவரது பிறந்தநாளான ஜூலை 15 அன்று அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்க தமிழக அரசு இப்போதைய கொரோனா காலத்தை விரைவில் வென்று, தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்றம், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் முழு கவனம் செலுத்த வேண்டும். 

    பெருந்தலைவரது பிறந்தநாளை கொண்டாடி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு த.மா.கா.வினர் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி, முகக்கவசம், சுத்தம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

    பெருந்தலைவர் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக ஆட்சியாளர்களும், தமிழக மக்களும் செயல்பட்டு வளமான தமிழகம், வலிமையான பாரதம் படைக்க பெருந்தலைவர் பிறந்த நாள் வழி வகுக்கட்டும். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×