search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சேகர்பாபு
    X
    அமைச்சர் சேகர்பாபு

    கோவில் யானைகளுக்கு குளியல் அறை வசதி- அமைச்சர் சேகர்பாபு தகவல்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு குளியல் அறை, 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவா் கோவில், குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் மற்றும் தேவஸ்தான பள்ளிகளை, இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் கோவில்களில் ஆய்வு செய்யப்பட்டு, கோவில்களை சீரமைப்பது, தெப்பக்குளங்களை தூர்வாருவது போன்ற பணிகளை விரைவுபடுத்தவும், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    குழித்துறை தேவஸ்தானத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த தேவஸ்வம் ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தற்போது முழுவதுமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அறநிலையத்துறை புனரமைக்கும் பணியை மேற்கொள்ளும்.

    தற்போது, தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 30 நாட்களுக்கு ஒருமுறை யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது, முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    யானைகள் குளிப்பதற்கு அந்தந்த கோவில்களில் குளியல் அறை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×