search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு
    X
    நீட் தேர்வு

    நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் ஆய்வுக்குழு இன்று அறிக்கை தாக்கல்

    செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த மாதம் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

    நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது.

    அதன்படி, சுமார் 89,342 பேர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது.

    இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் தங்களின் அறிக்கையை இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளது.
    Next Story
    ×