search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூரில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.

    6 நாட்களுக்கு பிறகு திருப்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

    மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 85 ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 228 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 801 ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பலருக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கும், மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் தட்டுப்பாடு காரணமாக கடந்த 6 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தடுப்பூசிகள் வந்துள்ளதையடுத்து இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
    Next Story
    ×