search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    எகிறும் வீடு வாடகை கட்டணத்தால் தவிக்கும் தொழிலாளர்கள்

    குடும்ப செலவுகள், மருத்துவம், கல்வி உட்பட அனைத்துக்கும் வருமானத்தின் பெரும்பகுதி செலவழித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
    பல்லடம்:
     
    திருப்பூர், பல்லடம், அவிநாசியில் பனியன், விசைத்தறி, சைசிங், ஸ்பின்னிங், கறிக்கோழி பண்ணைகள், சாய ஆலைகள் என பலவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    பெரும்பாலும் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை நம்பி இங்கு வருகின்றனர். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் வீட்டு வாடகை கட்டணத்தை கண்டு விழி பிதுங்கி வருகின்றனர்.
     
    குடும்ப செலவுகள், மருத்துவம், கல்வி உட்பட அனைத்துக்கும் வருமானத்தின் பெரும்பகுதி செலவழித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. வீட்டு வாடகைக்கே வருமானத்தின் பாதியை தரவேண்டிய நிலை உள்ளதாக தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.

    சாதாரணமாக 10 க்கு 10 அடி அளவுள்ள அறை ஒன்றுக்கு ரூ.2,500 முதல் வாடகையும், 10 மாத வாடகை தொகை ‘அட்வான்ஸ்’ ஆக வசூலிக்கப்படுகிறது. 

    இது தவிர அறைகளின் எண்ணிக்கை, இணைக்கப்பட்ட கழிவறை, தண்ணீர் வசதி ஆகியவற்றின் அடிப்படையில், வாடகை வசூலிக்கப்படுகிறது.
    குறைந்த வசதி வாய்ப்பு இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் கிடைக்கும் வீடுகளுக்கு செல்கிறோம். 

    வருமானத்தின் பெரும் பகுதி வாடகைக்கே செல்வதால் சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.வாடகைக்கான செலவு எங்கள் கனவுகளை சிதைத்து விடுகிறது. வாடகை வீடுகளுக்கான சட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்கிறார்கள் பல்லடம் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர் சிலர். 

    அதேசமயம் கட்டுமானச்செலவுகள் எகிறிவிட்டன. வீட்டை கட்டிப்பார்த்தால்தான் தெரியும். ஊரடங்கு நேரத்தில் பல வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்காமல் மனிதாபிமானம் காட்டினர் என்று தங்கள் தரப்பு கருத்தையும் முன்வைக்கின்றனர் வீட்டு உரிமையாளர்கள்.
    Next Story
    ×