search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரட்
    X
    கேரட்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது- கேரட் கிலோ ரூ.80 ஆக அதிகரிப்பு

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தினசரி அதிகளவில் கேரட் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் அங்கு சீசன் முடிந்து விட்டதால் தற்போது ஊட்டியில் இருந்து மட்டுமே கேரட் விற்பனைக்கு வருகிறது.
    போரூர்: 

    கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தினசரி அதிகளவில் கேரட் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் அங்கு சீசன் முடிந்து விட்டதால் தற்போது ஊட்டியில் இருந்து மட்டுமே கேரட் விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக கேரட் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்ற கேரட் 2 நாட்களுக்கு முன்பு திடீரென கிலோ ரூ.50-க்கு அதிகரித்தது.
     
    இந்த நிலையில் இன்று அதன் விலை மேலும் அதிகரித்து கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் கேரட் ரூ.80-க்கு விற்பனை ஆகிறது.

    ஆனால் வழக்கத்தை விட அதிகமாக இன்று 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதனால் நள்ளிரவு ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு பெட்டி (14கிலோ) தக்காளி பின்னர் அதிகாலையில் வியாபாரிகள் வரத்து குறைந்து விற்பனை மந்தமானதால் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதையும் வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான தக்காளி விற்பனை ஆகாமல் தேக்கமடையும் நிலை ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×