search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    30 மாவட்டங்களில் கொரோனா பரவல் மிகவும் குறைந்தது

    சென்னையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் நோய் பரவல் அதிகரிக்கவில்லை.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. முதல் அலையை விட 2-வது அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டன.

    கடந்த மே மாதம் நோய் தாக்கம் உச்சத்தில் இருந்தது. தமிழகம் முழுவதும் மே 12-ந்தேதி அதிகபட்சமாக 36,184 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அந்த மாதம் முழுவதுமே நோய் பாதிப்பு குறையாமலேயே இருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் முதல் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றால் கொரோனாவின் தாக்கம் வேகமாக குறைந்தது.

    இப்படி குறைய தொடங்கிய வைரஸ் தொற்று அதன் பிறகு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. இந்த மாதமும் நோய் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

    தினசரி பாதிப்பு மே மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவான நிலையில் தற்போது அது வெகுவாக குறைந்து இருக்கிறது. நேற்று 2,652 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதில் 8 மாவட்டங்களில் மட்டுமே 3 இலக்க எண்களில் தினசரி பாதிப்பு பதிவாகி உள்ளது.

    அதிகபட்சமாக கோவையில் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 193 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    தஞ்சையில் 191 பேருக்கும், சேலத்தில் 170 பேருக்கும், செங்கல்பட்டில் 139 பேருக்கும், திருப்பூரில் 157 பேருக்கும், திருச்சியில் 108 பேருக்கும் நேற்று நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த மாவட்டங்களை தவிர்த்து 30 மாவட்டங்களிலும் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது.

    சென்னையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் நோய் பரவல் அதிகரிக்கவில்லை. தொடர்ந்து தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று 165 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 171 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    கடலூரில் 81 பேருக்கும், தர்மபுரியில் 52 பேருக்கும், அரியலூரில் 26 பேருக்கும்  நேற்று நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 24 பேரும், கள்ளக்குறிச்சியில் 66 பேரும், காஞ்சிபுரத்தில் 39 பேரும், கன்னியாகுமரியில் 49 பேரும், கரூரில் 21 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    கிருஷ்ணகிரியில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் 33 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் 24 பேரும், நாகப்பட்டினத்தில் 44 பேரும், நாமக்கல்லில் 80 பேரும், நீலகிரியில் 84 பேரும், பெரம்பலூரில் 12 பேரும், புதுக்கோட்டையில் 37 பேரும், ராமநாதபுரத்தில் 19 பேரும், ராணிப்பேட்டையில் 37 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    கோப்புப்படம்

    தென்காசியில் 17 பேருக்கும், சிவகங்கையில் 35 பேருக்கும், தேனியில் 25 பேருக்கும், திருப்பத்தூரில் 33 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூரில் 76 பேரும், திருவண்ணாமலையில் 78 பேரும், திருவாரூரில் 36 பேரும், தூத்துக்குடியில் 42 பேரும், நெல்லையில் 16 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    வேலூரில் 35 பேருக்கும், விழுப்புரத்தில் 52 பேருக்கும், விருதுநகரில் 30 பேருக்கும் நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களில் படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தினசரி பாதிப்பு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    மாநிலம் முழுவதும் இதுவரை 25 லட்சத்து 21 ஆயிரத்து 438 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 5 லட்சத்து 35 ஆயிரத்து 278 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் 24 லட்சத்து 56 ஆயிரத்து 165 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதன்மூலம் 31 ஆயிரத்து 819 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சென்னையை பொறுத்தவரையில் தினமும் அதிகம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதனால் 1,680 பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 33,454 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னையில் 8,252 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
    Next Story
    ×