search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காலதாமதத்தை தவிர்க்க கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்க வேண்டுகோள்

    ஆம்புலன்ஸ் காலதாமதமாக வருவது பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும்.
    திருப்பூர்:

    உயிருக்கு போராடும் நோயாளிகளை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வர திருப்பூர் மாவட்டத்தில் 30 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நான்கு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள் திடீரென திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில், ‘அவிநாசி, பெருமாநல்லூர், காங்கயம், சின்னக்கரை பகுதியில் இருந்து இயங்கிய 108 ஆம்புலன்ஸ் திரும்ப பெறப்பட்டுள்ளது. வேறு பகுதியில் இயங்கும் ஆம்புலன்ஸ் இந்தப்பகுதியையும் கூடுதலாக கவனிக்கின்றன. ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் இருந்து அழைப்பு வரும் போது யாரெனும் ஒருவரை அழைத்து செல்ல தாமதம் ஏற்படுகிறது என்றனர்.

    108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், இயக்கத்துக்கு வந்து 6 ஆண்டு அல்லது 3 லட்சம் கி.மீ., ஓடிய ஆம்புலன்ஸ் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. அவ்விடத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். அவ்வகையில் மாவட்டத்தில் 4 ஆம்புலன்ஸ் திரும்ப பெறப்பட்டுள்ளது. விரைவில் புதிய ஆம்புலன்ஸ்கள் வரும் என்றனர்.

     சம்பவத்தன்று திருப்பூர் மங்கலம் ரோட்டில் சென்ற  65 வயது முதியவர் ஒருவரை அவ்வழியாக சென்ற மாடு பலமாக முட்டி கீழே தள்ளியது. தலையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அரை மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை

     தவித்த பயணியை 45 நிமிடத்துக்கு பின் ஆம்புலன்ஸ் வந்து அரசு மருத்துவமனைக்கு முதியவரை அழைத்து சென்றது. ஆம்புலன்ஸ் காலதாமதமாக வருவது பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும். எனவே கூடுதல் ஆம்புலன்ஸ்கள் இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×