search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

    ஊரடங்கால், காய்கறி, பூ உள்ளிட்டவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது.
    திருப்பூர் :

    ஓராண்டு பயிரான மஞ்சள் வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. லாபம் நிச்சயம் என்ற நிலை இருந்ததால் சில ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டனர்.

    ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் திடீரென மஞ்சள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு குவின்டால் ரூ.18 ஆயிரத்தில் இருந்து, ரூ.3,500க்கு விற்பனையானது. அதன்பின் மஞ்சள் விலை பெரிய அளவில் உயரவில்லை. தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

    இந்தநிலையில் ஊரடங்கால், காய்கறி, பூ உள்ளிட்டவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே விவசாயிகளின் கவனம் மீண்டும் மஞ்சள் பக்கம் திரும்பியுள்ளது. இந்த ஆண்டாவது விலை உயரும் என்ற நம்பிக்கையில் கணிசமான விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

    மஞ்சளுடன் ஊடுபயிராக சின்ன வெங்காயம் நடவு செய்வதால் மஞ்சளுக்கு ஆகும் செலவில் கணிசமான பகுதி சின்ன வெங்காயம் மூலம் கிடைக்கிறது. மஞ்சள் சாகுபடியில் இந்தாண்டாவது நல்லவிலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×