search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மாநில எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவலையே கட்டுப்படுத்த முடியாத நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா வைரசும் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள பாறசாலை பகுதியில் ஜிகா வைரஸ் தொற்று சிலருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    எனவே தமிழகத்திலும் ஜிகா வைரஸ் தொற்று பரவலாம் என்ற அச்சம் காணப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மாநில எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கொசு

    டெங்கு காய்ச்சலும் பரவி வருவதாக அச்சப்பட தேவையில்லை. ஒரே மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் இதுவரை பதிவாகவில்லை.
    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    கொசுக்களால் பரப்பப்படும் இந்த நோய்களை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சுகாதார துறையினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தேவையில்லாமல் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் அனைத்து பகுதிகளிலும், கொசு மருந்து தெளிப்பு, புகை மருந்து அடித்தல் போன்ற பணிகளில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.



    Next Story
    ×