search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலாளர் இறையன்பு
    X
    தலைமை செயலாளர் இறையன்பு

    டெங்கு, ஜிகா நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை- தலைமை செயலாளர் ஆலோசனை

    கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் டெங்கு, ஜிகா வைரஸ், டெல்டா பிளஸ் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    ஆனாலும் கொரோனா 3-வது அலையை தடுப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் மருத்துவ கண்காணிப்பு பணிக்குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நியமித்து இருந்தார்.

    இந்த பணிக்குழுவின் கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. 

    தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கொரோனாவின் 3-வது அலையை தடுப்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் இதில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    டெங்கு காய்ச்சல்

    கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் டெங்கு, ஜிகா வைரஸ், டெல்டா பிளஸ் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2,900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் இனி வரும் மழைக்காலங்களில் பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டந்தோறும் சுகாதாரப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

    ஜிகா வைரஸ் கேரளாவில் 13 பேருக்கு பரவி உள்ள நிலையில், குமரி மாவட்டத்தையொட்டிய பாரசாலையை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
    Next Story
    ×